• Sep 20 2024

வெடிபொருட்களுடன் ஒபாமா வீட்டுக்குள் நுழைய முயற்சி- பல மாத திட்டமா?samugammedia

Tamil nila / Jul 1st 2023, 8:51 pm
image

Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் இல்லம் அருகே வெடிபொருட்களுடன் 37 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

சியாட்டிலை சேர்ந்த டெய்லர் டரன்டோ (Taylor Taranto) எனும் 37 வயது நபரை வாஷிங்டன், டிசி சுற்றுப்புறத்தில் பராக் ஒபாமாவின் இல்லம் அருகே பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் ஒபாமா வீட்டில் இருந்தாரா என்பது தெரியவில்லை.

ஒபாமாவின் வீட்டிற்கு அருகில் டரான்டோ இருப்பதை ரகசிய முகவர்கள் கண்டறிந்து அவரைப் பின்தொடர்ந்தனர். அந்த நபர் ஒபாமாவின் இல்லத்திற்குள் நுழைய முயன்றார், ஆனால் அவர் அங்கு செல்வதற்குள் பொலிசாரிடம் பிடிபட்டார்.

இருப்பினும் கைது செய்யப்பட்ட போது டரான்டோவின் வேன் வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிடல் மீதான தாக்குதலில் ஈடுபட்டதற்காக இந்த இளைஞனுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஒபாமாவின் இல்லத்திற்கு அருகில் டரான்டோ இருப்பது தற்செயலானதல்ல என்று சுட்டிக்காட்டிய அதிகாரிகள், டரன்டோ பல மாதங்களாக DC பகுதியில் தங்கியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜனவரி 6 தாக்குதலின் சந்தேக நபர்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள டி.சி சிறைச்சாலைக்கு அருகில் இந்த இளைஞன் அடிக்கடி முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வெடிபொருட்களுடன் ஒபாமா வீட்டுக்குள் நுழைய முயற்சி- பல மாத திட்டமாsamugammedia அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் இல்லம் அருகே வெடிபொருட்களுடன் 37 வயது நபர் கைது செய்யப்பட்டார்.சியாட்டிலை சேர்ந்த டெய்லர் டரன்டோ (Taylor Taranto) எனும் 37 வயது நபரை வாஷிங்டன், டிசி சுற்றுப்புறத்தில் பராக் ஒபாமாவின் இல்லம் அருகே பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் ஒபாமா வீட்டில் இருந்தாரா என்பது தெரியவில்லை.ஒபாமாவின் வீட்டிற்கு அருகில் டரான்டோ இருப்பதை ரகசிய முகவர்கள் கண்டறிந்து அவரைப் பின்தொடர்ந்தனர். அந்த நபர் ஒபாமாவின் இல்லத்திற்குள் நுழைய முயன்றார், ஆனால் அவர் அங்கு செல்வதற்குள் பொலிசாரிடம் பிடிபட்டார்.இருப்பினும் கைது செய்யப்பட்ட போது டரான்டோவின் வேன் வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிடல் மீதான தாக்குதலில் ஈடுபட்டதற்காக இந்த இளைஞனுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.ஒபாமாவின் இல்லத்திற்கு அருகில் டரான்டோ இருப்பது தற்செயலானதல்ல என்று சுட்டிக்காட்டிய அதிகாரிகள், டரன்டோ பல மாதங்களாக DC பகுதியில் தங்கியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.மேலும் ஜனவரி 6 தாக்குதலின் சந்தேக நபர்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள டி.சி சிறைச்சாலைக்கு அருகில் இந்த இளைஞன் அடிக்கடி முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement