• Sep 20 2024

இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது! samugammedia

Tamil nila / Jul 1st 2023, 8:29 pm
image

Advertisement

10,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பிரசவங்களை மேற்பார்வையிட்டதற்காக, இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் கதீஜா பீபி என்ற 60 வயதான செவிலியர் ஒருவருக்கே  இந்த அரச விருது வழங்கப்பட்டுள்ளது. 

தனது 33 ஆண்டுகால செவிலியர் வாழ்க்கையில் அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

அவர் கருத்து தெரிவிக்கையில், தமது மேற்பார்வையில் பிரசவித்த  குழந்தைகளில் ஒரு குழந்தை கூட இறக்கவில்லை என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும், இதை தனது தொழிலில் சிறப்பம்சமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனும் உறுதி செய்துள்ளார்.

கதீஜா 1990 இல் வேலை செய்ய ஆரம்பித்தபோது கர்ப்பமாக இருந்துள்ளார். எனினும் ஏனைய பெண்களுக்கு உதவி செய்தமையை அவர் நினைவுக்கூருவதாகவும் கதீஜாவின் உத்வேகம் என்பது அவரது அம்மா ஸூலைகாவிடம் இருந்து கிடைத்த ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது தாயாரும் கிராம செவிலியராக இருந்துள்ளார்.

சிறுவயதில் ஊசிகளை வைத்து விளையாடுவேன், மருத்துவமனையின் வாசனை எனக்கு மிகவும் பழகி விட்டது எனவும் கூறியுள்ளார்.

செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்தியாவின் சுகாதார அமைப்புக்கு இன்றியமையாதவர்கள், ஆனால் அதிக தேவை மற்றும் குறைந்த வளங்கள் காரணமாக அது சவால்களை எதிர்கொள்கின்றது.

இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது samugammedia 10,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பிரசவங்களை மேற்பார்வையிட்டதற்காக, இந்திய பெண் செவிலியருக்கு அரச விருது வழங்கப்பட்டுள்ளது.அண்மையில் கதீஜா பீபி என்ற 60 வயதான செவிலியர் ஒருவருக்கே  இந்த அரச விருது வழங்கப்பட்டுள்ளது. தனது 33 ஆண்டுகால செவிலியர் வாழ்க்கையில் அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.அவர் கருத்து தெரிவிக்கையில், தமது மேற்பார்வையில் பிரசவித்த  குழந்தைகளில் ஒரு குழந்தை கூட இறக்கவில்லை என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும், இதை தனது தொழிலில் சிறப்பம்சமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனும் உறுதி செய்துள்ளார்.கதீஜா 1990 இல் வேலை செய்ய ஆரம்பித்தபோது கர்ப்பமாக இருந்துள்ளார். எனினும் ஏனைய பெண்களுக்கு உதவி செய்தமையை அவர் நினைவுக்கூருவதாகவும் கதீஜாவின் உத்வேகம் என்பது அவரது அம்மா ஸூலைகாவிடம் இருந்து கிடைத்த ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது தாயாரும் கிராம செவிலியராக இருந்துள்ளார்.சிறுவயதில் ஊசிகளை வைத்து விளையாடுவேன், மருத்துவமனையின் வாசனை எனக்கு மிகவும் பழகி விட்டது எனவும் கூறியுள்ளார்.செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்தியாவின் சுகாதார அமைப்புக்கு இன்றியமையாதவர்கள், ஆனால் அதிக தேவை மற்றும் குறைந்த வளங்கள் காரணமாக அது சவால்களை எதிர்கொள்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement