• Dec 09 2024

மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்..!

Sharmi / Oct 25th 2024, 4:26 pm
image

நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் லக்கம் பகுதியில் இன்று மதியம் அரச பேருந்து, பார ஊர்தி மற்றும் முச்சக்கர வண்டி  ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச் சம்பவம் அவிஸ்சாவலை பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் லக்கம் பகுதியில் வளைவு பகுதியில் சற்று குறைந்த வேகத்தில் மஸ்கெலியா நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் சிரிய ரக பார ஊர்தி பின் பகுதியில் மோதியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஹப்புகஸ்தனை பகுதியில் இருந்து மஸ்கெலியா நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம். நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் லக்கம் பகுதியில் இன்று மதியம் அரச பேருந்து, பார ஊர்தி மற்றும் முச்சக்கர வண்டி  ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இச் சம்பவம் அவிஸ்சாவலை பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் லக்கம் பகுதியில் வளைவு பகுதியில் சற்று குறைந்த வேகத்தில் மஸ்கெலியா நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் சிரிய ரக பார ஊர்தி பின் பகுதியில் மோதியுள்ளது.அதனைத் தொடர்ந்து ஹப்புகஸ்தனை பகுதியில் இருந்து மஸ்கெலியா நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.இது குறித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement