அரசியல் ஆய்வாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஆ.யதீந்திரா இன்று(25) திருகோணமலை, சம்பூர் -காளி கோயிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஆ.யதீந்திரா ,
திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுபவர்களில் நானும் ஒருவன்.
பிரச்சாரம் செய்கின்ற போது கடந்த காலங்களில் இந்த கட்சி என்ன செய்தது என்கின்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது ஞாயமான கேள்வி. இதில் மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.கடந்த காலங்களில் அவர்கள்தான் நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்கள்.
திருகோணமலையின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக ஒரு பிரதிநிதியை தெரிவு செய்கின்ற போது அவரது குடும்பம், ஊர்,சொந்தமா என்பதற்கு அப்பால் எம்மை பிரநிதித்துவப் படுத்துவதற்கு தகுதியுள்ளவரா என்பதை மக்கள் பார்க்க வேண்டும்.
எங்களிலிருந்து ஒருவர் பாராளுமன்றம் செல்லப் போகின்றார்.
முதன்மை வேட்பாளர் என்று யாரும் இல்லை.அவர் யார் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
தெரிவு செய்வதற்கும் வாக்கு கேட்பதற்கும் எல்லோருக்கும் தகுதியுள்ளது.விரும்பியவர்களுக்கு மக்கள் வாக்களிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
திருமலையில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம். அரசியல் ஆய்வாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஆ.யதீந்திரா இன்று(25) திருகோணமலை, சம்பூர் -காளி கோயிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஆ.யதீந்திரா ,திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுபவர்களில் நானும் ஒருவன்.பிரச்சாரம் செய்கின்ற போது கடந்த காலங்களில் இந்த கட்சி என்ன செய்தது என்கின்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.இது ஞாயமான கேள்வி. இதில் மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.கடந்த காலங்களில் அவர்கள்தான் நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்கள்.திருகோணமலையின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக ஒரு பிரதிநிதியை தெரிவு செய்கின்ற போது அவரது குடும்பம், ஊர்,சொந்தமா என்பதற்கு அப்பால் எம்மை பிரநிதித்துவப் படுத்துவதற்கு தகுதியுள்ளவரா என்பதை மக்கள் பார்க்க வேண்டும்.எங்களிலிருந்து ஒருவர் பாராளுமன்றம் செல்லப் போகின்றார்.முதன்மை வேட்பாளர் என்று யாரும் இல்லை.அவர் யார் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.தெரிவு செய்வதற்கும் வாக்கு கேட்பதற்கும் எல்லோருக்கும் தகுதியுள்ளது.விரும்பியவர்களுக்கு மக்கள் வாக்களிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.