வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழாவானது நேற்றையதினம் (24) சங்கானை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
சங்கானை பேருந்து நிலையத்திலிருந்து விருந்தினர்கள் பாரம்பரிய பொம்மலாட்டம், குதிரையாட்டம், இனியம் ஆகியவற்றின் அணிவகுப்புடன் கலாசார மத்திய நிலையம் வரை அழைத்து வரப்பட்டனர்.
அதன் பின்னர் மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, நாடா வெட்டி வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன்போது பல்வேறு விதமான கலை நிகழ்வுகள், கலைஞர்களுக்கான கௌரவிப்புகள், விருந்தினர்களின் உரைகள் என்பன வெகு சிறப்பாக நடைபெற்றன.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழாவில், பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்ததுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் இந்தப் பண்பாட்டுப் பெருவிழாவில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா. வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழாவானது நேற்றையதினம் (24) சங்கானை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.சங்கானை பேருந்து நிலையத்திலிருந்து விருந்தினர்கள் பாரம்பரிய பொம்மலாட்டம், குதிரையாட்டம், இனியம் ஆகியவற்றின் அணிவகுப்புடன் கலாசார மத்திய நிலையம் வரை அழைத்து வரப்பட்டனர்.அதன் பின்னர் மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, நாடா வெட்டி வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது பல்வேறு விதமான கலை நிகழ்வுகள், கலைஞர்களுக்கான கௌரவிப்புகள், விருந்தினர்களின் உரைகள் என்பன வெகு சிறப்பாக நடைபெற்றன.வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழாவில், பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்ததுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் இந்தப் பண்பாட்டுப் பெருவிழாவில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.