• Sep 21 2024

வசந்த முதலிகேயை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் – இன்று அம்பலப்படுத்துவார்!!

Tamil nila / Feb 2nd 2023, 12:21 pm
image

Advertisement

நேற்று விடுதலையான அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தன்னை கொல்வதற்கான சதிகுறித்த விபரங்களை இன்று வெளியிடவுள்ளார்.


167 தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலையாகியுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.


பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தன்னை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சிகள் குறித்த விபரங்களை அம்பலப்படுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தடுப்பிலிருந்தவேளை அரசாங்கம் எவ்வாறு தன்னை கொலை செய்ய திட்டமிட்டது யார் இதற்கான திட்டங்களை வகுத்தது தன்னை எங்கே அழைத்து செல்லப்பட்டார்கள் போன்ற விபரங்களை இன்று வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒடுக்குமுறையை முறியடிப்பதில் மக்கள் இதுவரை வெற்றிபெற்றுள்ளனர் சட்டத்தரணிகள் செயற்பாட்டாளர்கள் தொழில்சங்க தலைவர்கள் உட்பட பலர் தங்களை இந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்துள்ளனர் அவர்கள் மக்கள் போராட்டத்தின் மூலம் எனது விடுதலையை சாத்தியமாக்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் மக்கள் போராட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட விவகாரங்களிற்கு எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை நாங்கள் அரசாங்கத்திற்கு அடிபணிய தயாரில்லை எனவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.


எனது விடுதலை போராட்டத்தின் ஆரம்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வசந்த முதலிகேயை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் – இன்று அம்பலப்படுத்துவார் நேற்று விடுதலையான அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தன்னை கொல்வதற்கான சதிகுறித்த விபரங்களை இன்று வெளியிடவுள்ளார்.167 தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலையாகியுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தன்னை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சிகள் குறித்த விபரங்களை அம்பலப்படுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தடுப்பிலிருந்தவேளை அரசாங்கம் எவ்வாறு தன்னை கொலை செய்ய திட்டமிட்டது யார் இதற்கான திட்டங்களை வகுத்தது தன்னை எங்கே அழைத்து செல்லப்பட்டார்கள் போன்ற விபரங்களை இன்று வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒடுக்குமுறையை முறியடிப்பதில் மக்கள் இதுவரை வெற்றிபெற்றுள்ளனர் சட்டத்தரணிகள் செயற்பாட்டாளர்கள் தொழில்சங்க தலைவர்கள் உட்பட பலர் தங்களை இந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்துள்ளனர் அவர்கள் மக்கள் போராட்டத்தின் மூலம் எனது விடுதலையை சாத்தியமாக்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.எனினும் மக்கள் போராட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட விவகாரங்களிற்கு எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை நாங்கள் அரசாங்கத்திற்கு அடிபணிய தயாரில்லை எனவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.எனது விடுதலை போராட்டத்தின் ஆரம்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement