• Apr 15 2025

புத்தாண்டு காலங்களில் சிறுவர்கள் தொடர்பில் அவதானம் - வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்!

Chithra / Apr 13th 2025, 2:32 pm
image


 

பட்டாசுக்களை வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, புத்தாண்டு காலங்களில் சிறுவர்கள் விபத்துக்குள்ளாவதை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் தீவிபத்து, மின்சார தாக்குதலுக்கு உள்ளாகுகின்றமை, நீராடச்சென்று நீரில் மூழ்குகின்றமை போன்ற அனர்த்தங்கள் பதிவாகின்றன. 

எனவே இது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மது போதையில் பிள்ளைகளுடன் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


புத்தாண்டு காலங்களில் சிறுவர்கள் தொடர்பில் அவதானம் - வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்  பட்டாசுக்களை வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, புத்தாண்டு காலங்களில் சிறுவர்கள் விபத்துக்குள்ளாவதை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் தீவிபத்து, மின்சார தாக்குதலுக்கு உள்ளாகுகின்றமை, நீராடச்சென்று நீரில் மூழ்குகின்றமை போன்ற அனர்த்தங்கள் பதிவாகின்றன. எனவே இது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மது போதையில் பிள்ளைகளுடன் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement