• Sep 08 2024

பொதுமக்களே அவதானம்; பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி மோசடி! வங்கியில் பணம் வைத்திருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Chithra / Jul 12th 2024, 12:50 pm
image

Advertisement

 

பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி வங்கி கணக்குகளை பெற்று பண மோசடி செய்யும் சம்பங்கள் தொடர்பில்  இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொல்கஹவளை மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நபரொருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து பணப் பரிசு கிடைத்துள்ளதாக மோசடியாளர் தெரிவித்துள்ளார்.

அதனை வைப்பு செய்வதாக வங்கி கணக்கினை பெற்று, அதிலிருந்து 180,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபரிகளிடமிருந்து 7 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 109 சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு பிரதேசங்களில் நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களே அவதானம்; பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி மோசடி வங்கியில் பணம் வைத்திருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி  பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி வங்கி கணக்குகளை பெற்று பண மோசடி செய்யும் சம்பங்கள் தொடர்பில்  இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொல்கஹவளை மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நபரொருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து பணப் பரிசு கிடைத்துள்ளதாக மோசடியாளர் தெரிவித்துள்ளார்.அதனை வைப்பு செய்வதாக வங்கி கணக்கினை பெற்று, அதிலிருந்து 180,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சந்தேக நபரிகளிடமிருந்து 7 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 109 சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு பிரதேசங்களில் நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement