• Jan 13 2025

இலங்கைக்கு சுற்றுலா வந்த அவுஸ்திரேலிய பயணி பரிதாப மரணம்

Chithra / Dec 23rd 2024, 4:02 pm
image

 

பலாங்கொடை  - நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அவுஸ்திரேலியாவைச்  சேர்ந்த 74 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து 18 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்துள்ளது.

அவர்கள் நேற்றைய தினம்  நன்பேரியல் சுற்றுலா தளத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வேளையில்,

குறித்த அவுஸ்திரேலியா பிரஜை தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக    விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பனிமூட்டமான வானிலை காணப்படுவதால் விபத்துக்கள் அதிகம் வாய்ப்புள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த அவுஸ்திரேலிய பயணி பரிதாப மரணம்  பலாங்கொடை  - நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் அவுஸ்திரேலியாவைச்  சேர்ந்த 74 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.அவுஸ்திரேலியாவிலிருந்து 18 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்துள்ளது.அவர்கள் நேற்றைய தினம்  நன்பேரியல் சுற்றுலா தளத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வேளையில்,குறித்த அவுஸ்திரேலியா பிரஜை தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக    விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதேவேளை, நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பனிமூட்டமான வானிலை காணப்படுவதால் விபத்துக்கள் அதிகம் வாய்ப்புள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement