• Nov 23 2024

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி !

Tharmini / Oct 22nd 2024, 12:05 pm
image

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கல்வி அமைச்சின் உயர் கல்வி பிரிவின் மூலம் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி மூன்று பாடங்களில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் நேற்று (21) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களை இணைத்தல், அக்கல்வி நிறுவனங்களின் கற்கைநெறிகள் அதற்கான தகைமைகள், கற்கை நெறிகளுக்கு அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் போன்ற பல விடயங்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர், திறன் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர், மனித வள அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர்,  மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கல்வி அமைச்சின் உயர் கல்வி பிரிவின் மூலம் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி மூன்று பாடங்களில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் நேற்று (21) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களை இணைத்தல், அக்கல்வி நிறுவனங்களின் கற்கைநெறிகள் அதற்கான தகைமைகள், கற்கை நெறிகளுக்கு அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் போன்ற பல விடயங்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டது.இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர், திறன் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர், மனித வள அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர்,  மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement