கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு மூதூர் ஆலிம் நகர் வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
விழிப்பூட்டும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது.
மூதூர் ஆலிம் நகர் ஜும்மா பள்ளிவாயல் மூன்றலில், வித்தியாலய அதிபர் ஜஸ்ரி ஜவாப்தின் தலைமையில், இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த நான்கு வார காலமாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் இறுதி வாரதின் வேலைத்திட்டம் இதுவாகும்.
சமூக, சுற்றாடல், ஒழுக்க விழுமியங்களின் நிலைபேறான தன்மையினை காத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலை திட்டத்தில் "மகிழ்ச்சி மிக்க பாடசாலை" என்ற கருப்பொருளை முதன்மைப்படுத்தி மாணவர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
மாணவர்கள் விழிப்பூட்டக்கூடிய பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு இதில் கலந்து கொண்டனர்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், முப்படையினர் மற்றும் கல்வி அதிகாரிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு- மாணவர்களால் முன்னெடுப்பு கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு மூதூர் ஆலிம் நகர் வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுவிழிப்பூட்டும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது.மூதூர் ஆலிம் நகர் ஜும்மா பள்ளிவாயல் மூன்றலில், வித்தியாலய அதிபர் ஜஸ்ரி ஜவாப்தின் தலைமையில், இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.கடந்த நான்கு வார காலமாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் இறுதி வாரதின் வேலைத்திட்டம் இதுவாகும். சமூக, சுற்றாடல், ஒழுக்க விழுமியங்களின் நிலைபேறான தன்மையினை காத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலை திட்டத்தில் "மகிழ்ச்சி மிக்க பாடசாலை" என்ற கருப்பொருளை முதன்மைப்படுத்தி மாணவர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.மாணவர்கள் விழிப்பூட்டக்கூடிய பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு இதில் கலந்து கொண்டனர்.பெற்றோர்கள், ஆசிரியர்கள், முப்படையினர் மற்றும் கல்வி அதிகாரிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.