• Nov 25 2024

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி..!

Sharmi / Aug 10th 2024, 4:13 pm
image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் எதிர்வரும் 30 ஆம் திகரி கவனயீர்ப்பு பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாண  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த வருடத்திற்கான சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை வழமை போல எமது தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக வருகின்ற 30.08.2024 வெள்ளிக்கிழமை அன்று அடையாளப்படுத்த உள்ளோம். 

அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வானது காலை 10 மணிக்கு டிப்போச்சந்தியை நோக்கிப் பேரணியாகச் சென்று அங்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவு பெறும்.

2017.02.20ம் திகதியன்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் உறவுகளினதும், கிளிநொச்சி வாழ் மக்களுடையதும், ஊடக உறவுகள், வர்த்தகப்பெருமக்கள், பொது அமைப்புக்கள், கழகங்கள், ஊழியர்கள், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரதும் ஆதரவுடன் தொடங்கிய இப் போராட்டமானது 2749 வது நாளில் காலடி வைக்கும் இத்தினத்திலும் உங்கள் ஆதரவை வழங்கி தாங்கள் இப்பேரணியில் கலந்து கொண்டு எமக்கு வலுச் சேர்க்க வேண்டுமென்று அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் எதிர்வரும் 30 ஆம் திகரி கவனயீர்ப்பு பேரணியொன்று இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாண  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இந்த வருடத்திற்கான சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை வழமை போல எமது தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக வருகின்ற 30.08.2024 வெள்ளிக்கிழமை அன்று அடையாளப்படுத்த உள்ளோம். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வானது காலை 10 மணிக்கு டிப்போச்சந்தியை நோக்கிப் பேரணியாகச் சென்று அங்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவு பெறும்.2017.02.20ம் திகதியன்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் உறவுகளினதும், கிளிநொச்சி வாழ் மக்களுடையதும், ஊடக உறவுகள், வர்த்தகப்பெருமக்கள், பொது அமைப்புக்கள், கழகங்கள், ஊழியர்கள், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரதும் ஆதரவுடன் தொடங்கிய இப் போராட்டமானது 2749 வது நாளில் காலடி வைக்கும் இத்தினத்திலும் உங்கள் ஆதரவை வழங்கி தாங்கள் இப்பேரணியில் கலந்து கொண்டு எமக்கு வலுச் சேர்க்க வேண்டுமென்று அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement