சமூக வலைத்தளங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல் மற்றும் இளவயதுத் திருமணங்களைத் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு மூதூரில் இடம்பெற்றுள்ளது.
மூதூர் -பாட்டாளிபுர கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் நடைபெற்றதாகக் கருதப்படும் வன்புணர்வுச் சம்பவம் மற்றும் அப்பகுதியில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் இளவயதுத் திருமணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலகம் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சம்பூர் பொலிஸ் நிலையம் மற்றும் மூதூர் வலயக்கல்வி அலுவலகம் போன்றன இணைந்து பாட்டாளிபுரப் பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாட்டினை இன்றைய தினம் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் முன்னெடுத்தனர்.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்துரைகளை மூதூர் பிரதேச செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சம்பூர் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூதூர் பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பாட்டாளிபுரப் பிரதேசத்துக்கான குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் மூதூர் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் போன்றோர் நிகழ்த்தினர்.
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு சமூக வலைத்தளங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல் மற்றும் இளவயதுத் திருமணங்களைத் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு மூதூரில் இடம்பெற்றுள்ளது. மூதூர் -பாட்டாளிபுர கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் நடைபெற்றதாகக் கருதப்படும் வன்புணர்வுச் சம்பவம் மற்றும் அப்பகுதியில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் இளவயதுத் திருமணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது. மூதூர் பிரதேச செயலகம் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சம்பூர் பொலிஸ் நிலையம் மற்றும் மூதூர் வலயக்கல்வி அலுவலகம் போன்றன இணைந்து பாட்டாளிபுரப் பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாட்டினை இன்றைய தினம் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் முன்னெடுத்தனர். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.இவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்துரைகளை மூதூர் பிரதேச செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சம்பூர் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூதூர் பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பாட்டாளிபுரப் பிரதேசத்துக்கான குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் மூதூர் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் போன்றோர் நிகழ்த்தினர்.