• Dec 03 2024

ஆடுகளம் சரியில்லை - துடுப்பாட்டத்தில் சிக்கல் நிலை

Tharun / Jun 7th 2024, 6:55 pm
image

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை உள்ளிட்ட அணிகள் பெற்றுள்ள நிலைப்பாடுகள் நல்ல நிலையில் இல்லை என இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

பயிற்சியின் போது யாராலும் சரியாக பந்தை அடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாக இலங்கை அணிக்கு கடினமாக இருந்ததாகவும் சில விமானங்கள் பல மணித்தியாலங்கள் எடுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், அவற்றை சாக்குப்போக்கு பிரச்சினையாக மாற்ற எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவிக்கும் ஏஞ்சலோ மெத்தியூஸ், எதிர்வரும் போட்டிகளில் அனைத்துத் தடைகளையும் மீறி வெற்றி பெறுவோம் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை உட்பட பல நாடுகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் பத்து நாட்களுக்கு பிறகு இலங்கை அணிக்கு பயிற்சி வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆடுகளம் சரியில்லை - துடுப்பாட்டத்தில் சிக்கல் நிலை அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை உள்ளிட்ட அணிகள் பெற்றுள்ள நிலைப்பாடுகள் நல்ல நிலையில் இல்லை என இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.பயிற்சியின் போது யாராலும் சரியாக பந்தை அடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.கடந்த சில நாட்களாக இலங்கை அணிக்கு கடினமாக இருந்ததாகவும் சில விமானங்கள் பல மணித்தியாலங்கள் எடுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.எவ்வாறாயினும், அவற்றை சாக்குப்போக்கு பிரச்சினையாக மாற்ற எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவிக்கும் ஏஞ்சலோ மெத்தியூஸ், எதிர்வரும் போட்டிகளில் அனைத்துத் தடைகளையும் மீறி வெற்றி பெறுவோம் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை உட்பட பல நாடுகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுமார் பத்து நாட்களுக்கு பிறகு இலங்கை அணிக்கு பயிற்சி வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement