• Nov 14 2024

புத்தளத்தில் சீரற்ற வானிலையால் - 23689 பேர் பாதிப்பு !

Tharmini / Nov 10th 2024, 11:59 am
image

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6832 குடும்பங்களைச் சேர்ந்த 23689 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, மஹாவெவ, ஆராச்சிக்கட்டுவ, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய 10 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 74 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 6832 குடும்பங்களைச் சேர்ந்த 23689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 12 கிராம சேவகர் பிரிவுகளில் 4016 குடும்பங்களைச் சேர்ந்த 13351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 1501 குடும்பங்களைச் சேர்ந்த 5846 பேரும் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளில் 395 குடும்பங்களைச் சேர்ந்த 1335 பேரும், வன்னாத்தவில்லுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 195 பேரும் நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  15 கிராம சேவகர் பிரிவில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 748 பேரும் மஹாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 02 கிராம சேவகர் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேரும் , ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 214 பேரும் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 06 கிராம சேவகர் பிரிவுகளில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 868 பேரும் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  03 கிராம சேவகர் பிரிவுகளில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 90 குடும்பங்களைச் சேர்ந்த 322 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முந்தலில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேரும், புத்தளத்தில் ஒரு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான சமைத்த உணவு, சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன அந்தந்த பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.





புத்தளத்தில் சீரற்ற வானிலையால் - 23689 பேர் பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6832 குடும்பங்களைச் சேர்ந்த 23689 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, மஹாவெவ, ஆராச்சிக்கட்டுவ, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய 10 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 74 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 6832 குடும்பங்களைச் சேர்ந்த 23689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 12 கிராம சேவகர் பிரிவுகளில் 4016 குடும்பங்களைச் சேர்ந்த 13351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 1501 குடும்பங்களைச் சேர்ந்த 5846 பேரும் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 05 கிராம சேவகர் பிரிவுகளில் 395 குடும்பங்களைச் சேர்ந்த 1335 பேரும், வன்னாத்தவில்லுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 195 பேரும் நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  15 கிராம சேவகர் பிரிவில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 748 பேரும் மஹாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 02 கிராம சேவகர் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேரும் , ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 214 பேரும் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 06 கிராம சேவகர் பிரிவுகளில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 868 பேரும் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  03 கிராம சேவகர் பிரிவுகளில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 90 குடும்பங்களைச் சேர்ந்த 322 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முந்தலில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேரும், புத்தளத்தில் ஒரு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான சமைத்த உணவு, சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன அந்தந்த பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement