• Feb 14 2026

டிட்வா புயலால் சிதைந்த பதுளை; மீள கட்டியெழுப்ப இணைந்த குழு!

shanuja / Dec 2nd 2025, 1:17 pm
image

டிட்வா புயலால் சிதைந்த பதுளையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் மாத்தறையைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். 


இதற்கமைய டிட்வா புயலால் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மாத்தறையைச் சேர்ந்த 826 பேர் கொண்ட குழு நேற்று (01) பதுளைக்கு சென்றுள்ளது. 


பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒற்றுமையைக் காட்டும் வகையில், பதுளை மாவட்ட செயலகத்தின் கூற்றுப்படி, இந்தக் குழு தங்கள் உழைப்பை மட்டுமல்லாமல், புனரமைப்புக்கான அத்தியாவசிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் கொண்டு சென்றுள்ளது. 



பேக்ஹோ லோடர்கள், செயின்சாக்கள், தண்ணீர் பவுசர்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட பலவற்றுடன் குறித்த குழு பதுளையை சென்றடைந்தது. 


நிவாரணக் குழுவில் ரெட் ஸ்டார் அமைப்பின் உறுப்பினர்கள், பல்வேறு தன்னார்வக் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகக் குழுக்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

டிட்வா புயலால் சிதைந்த பதுளை; மீள கட்டியெழுப்ப இணைந்த குழு டிட்வா புயலால் சிதைந்த பதுளையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் மாத்தறையைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இதற்கமைய டிட்வா புயலால் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மாத்தறையைச் சேர்ந்த 826 பேர் கொண்ட குழு நேற்று (01) பதுளைக்கு சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒற்றுமையைக் காட்டும் வகையில், பதுளை மாவட்ட செயலகத்தின் கூற்றுப்படி, இந்தக் குழு தங்கள் உழைப்பை மட்டுமல்லாமல், புனரமைப்புக்கான அத்தியாவசிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் கொண்டு சென்றுள்ளது. பேக்ஹோ லோடர்கள், செயின்சாக்கள், தண்ணீர் பவுசர்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட பலவற்றுடன் குறித்த குழு பதுளையை சென்றடைந்தது. நிவாரணக் குழுவில் ரெட் ஸ்டார் அமைப்பின் உறுப்பினர்கள், பல்வேறு தன்னார்வக் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகக் குழுக்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement