• Nov 14 2024

வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்- பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புகள்..!

Sharmi / Sep 20th 2024, 10:30 am
image

ஜனாதிபதி தேர்தல் நாளையதினம்(21) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் (20) வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில்,யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழில் 511 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108 வாக்களிப்பு நிலையங்களும் என மொத்தமாக 619 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், இன்றையதினம் காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள்  வாக்களிப்பு நிலையங்களுக்கு   அனுப்பும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, யாழ் மாவட்டத்தில் வாக்கெண்ணும் மையமாக செயற்படவுள்ள யாழ் மத்திய கல்லூரியை சூழவுள்ள பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவு மாவட்டத்தினை பொறுத்தவரையில்  86,889 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து இன்று காலை 7 மணி முதல்  வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான 318 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(20) காலை 7 மணியளவில்  திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் ஆரம்பமானது.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று(20) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்று காலை முதல் வாக்கு பட்டியல் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பட்டிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும்  மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 260 வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அம்பாறை மாவட்டம்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அம்பாறை  மாவட்ட வாக்கு  எண்ணும் நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில்   இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  528  வாக்களிப்பு நிலையங்களில் 555,432  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.அதன்படி அம்பாறை 188222 பேர், சம்மாந்துறை 99727 பேர், கல்முனை 82830 பேர், பொத்துவில் தொகுதியில் 184653 பேர் ஆகும்.அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள் 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள்  74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில்  வன்னி மாவட்டத்தில்  306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் இன்று பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளுக்காக வன்னி மாவட்டத்தில் 4,796 அரச ஊழியர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பொலிசார், விசேட அதிரடிப் படையினர், ஊர்காவற்படை என 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

திருகோணமலை மாவட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான 318 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (20) காலை திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் ஆரம்பமானது.

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் 318 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் யாவும் பொலிஸ் பாதுகாப்புடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசிலன் மற்றும் அஞ்சல் வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ். கே. டி. நிரஞ்சன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ், வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

புத்தளம் மாவட்டம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள 470 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இன்று (20) காலை எடுத்துச் செல்லப்பட்டன.

புத்தளம் சென். அன்றூஸ் மத்தியக் கல்லூரி, பாத்திமா மகளிர் கல்லூரி, செய்னப் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிலிருந்து குறித்த வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் என்பன பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுமதியளிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டி மற்றும் வாக்குச் சீட்டுகள் என்பவற்றை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் போது புத்தளம் நகரம் எங்கும் பொலிஸாரும், விஷேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, பூக்குளம் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் என்பன வில்பத்து வனப்பகுதி ஊடாக கொண்டு செல்ல தேவையான அனுமதியினை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பெற்றுள்ளதாகவும், கற்பிட்டி முகத்துவார வாக்குச் சாவடிக்கு படகுகள் மூலம் அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.





வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்- பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புகள். ஜனாதிபதி தேர்தல் நாளையதினம்(21) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் (20) வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில்,யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழில் 511 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108 வாக்களிப்பு நிலையங்களும் என மொத்தமாக 619 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.இந்நிலையில், இன்றையதினம் காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள்  வாக்களிப்பு நிலையங்களுக்கு   அனுப்பும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.யாழ்ப்பாண மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அதேவேளை, யாழ் மாவட்டத்தில் வாக்கெண்ணும் மையமாக செயற்படவுள்ள யாழ் மத்திய கல்லூரியை சூழவுள்ள பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.முல்லைத்தீவு மாவட்டத்தினை பொறுத்தவரையில்  86,889 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து இன்று காலை 7 மணி முதல்  வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான 318 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(20) காலை 7 மணியளவில்  திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் ஆரம்பமானது.அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றது.மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று(20) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்று காலை முதல் வாக்கு பட்டியல் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வாக்குப்பட்டிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும்  மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இன்றைய தினம் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 260 வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.அம்பாறை மாவட்டம்நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அம்பாறை  மாவட்ட வாக்கு  எண்ணும் நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில்   இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  528  வாக்களிப்பு நிலையங்களில் 555,432  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.அதன்படி அம்பாறை 188222 பேர், சம்மாந்துறை 99727 பேர், கல்முனை 82830 பேர், பொத்துவில் தொகுதியில் 184653 பேர் ஆகும்.அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள் 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள்  74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதித் தேர்தலில்  வன்னி மாவட்டத்தில்  306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் இன்று பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தேர்தல் கடமைகளுக்காக வன்னி மாவட்டத்தில் 4,796 அரச ஊழியர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பொலிசார், விசேட அதிரடிப் படையினர், ஊர்காவற்படை என 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்திருகோணமலை மாவட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான 318 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (20) காலை திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் ஆரம்பமானது.ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.திருகோணமலை மாவட்டத்தில் 318 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் யாவும் பொலிஸ் பாதுகாப்புடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசிலன் மற்றும் அஞ்சல் வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ். கே. டி. நிரஞ்சன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ், வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.புத்தளம் மாவட்டம்ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள 470 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இன்று (20) காலை எடுத்துச் செல்லப்பட்டன.புத்தளம் சென். அன்றூஸ் மத்தியக் கல்லூரி, பாத்திமா மகளிர் கல்லூரி, செய்னப் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிலிருந்து குறித்த வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் என்பன பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுமதியளிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.இவ்வாறு வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டி மற்றும் வாக்குச் சீட்டுகள் என்பவற்றை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் போது புத்தளம் நகரம் எங்கும் பொலிஸாரும், விஷேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதேவேளை, பூக்குளம் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் என்பன வில்பத்து வனப்பகுதி ஊடாக கொண்டு செல்ல தேவையான அனுமதியினை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பெற்றுள்ளதாகவும், கற்பிட்டி முகத்துவார வாக்குச் சாவடிக்கு படகுகள் மூலம் அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement