கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் தங்கியிருப்பதைத் தடைசெய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பௌத்த பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
நேற்று (15) வியாழக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்ததுடன், பல பிக்குகள் குறித்த பகுதியில் தங்கியிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் தங்கியிருப்பதைத் தடைசெய்யும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், போராட்டக்காரர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே, காலி வீதியின் மறுபுறத்தில் உள்ள நடைபாதையில் தங்கியிருந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதி செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்த தடை கொழும்பில் பரபரப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் தங்கியிருப்பதைத் தடைசெய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பௌத்த பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.நேற்று (15) வியாழக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்ததுடன், பல பிக்குகள் குறித்த பகுதியில் தங்கியிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் தங்கியிருப்பதைத் தடைசெய்யும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும், போராட்டக்காரர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே, காலி வீதியின் மறுபுறத்தில் உள்ள நடைபாதையில் தங்கியிருந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.