• Nov 23 2024

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை!

Chithra / Aug 7th 2024, 8:59 am
image

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம் தொடர்பில் வேட்பாளர்களை தெளிவுபடுத்த வேண்டுமென சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும், ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களும் இணங்கியுள்ளனர்.

பிரசாரங்களின் போது பாரியளவில் பொலித்தின் பயன்படுத்துவதனால் சுற்றுச்சூழலுக்கு பாரியளவு தீங்கு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதனை தவிர்ப்பது குறித்து தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

அபிவிருத்தி பணிகள், அங்குரார்ப்பணங்கள் என்பனவற்றின் போது அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம் தொடர்பில் வேட்பாளர்களை தெளிவுபடுத்த வேண்டுமென சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.இந்த யோசனைக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும், ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களும் இணங்கியுள்ளனர்.பிரசாரங்களின் போது பாரியளவில் பொலித்தின் பயன்படுத்துவதனால் சுற்றுச்சூழலுக்கு பாரியளவு தீங்கு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதனை தவிர்ப்பது குறித்து தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நேற்று நடைபெற்றுள்ளது.அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.அபிவிருத்தி பணிகள், அங்குரார்ப்பணங்கள் என்பனவற்றின் போது அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement