• Mar 29 2025

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு

OIC
Chithra / Mar 26th 2025, 1:25 pm
image

 

மாடுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு சொந்தமான  வங்கிக் கணக்குகளை  முடக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளை அரசுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் ஒப்படைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி  உத்தரவிட்டிருந்தது.

இதன்போது வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.எம் . ரத்நாயக்க கைப்பற்றப்பட்ட  20 மாடுகளையும் அரசுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் ஒப்படைக்காமல் கடத்தல்காரர்களிடமே மீண்டும் ஒப்படைத்துள்ளார். 

இதனையடுத்து வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி உத்தரவிட்டது.

ஆனால் வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவை மீறி பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்ற தலைமறைவாக உள்ளார்.

எனவே வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு சொந்தமான  வங்கிக் கணக்குகளை முடக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு  மாடுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு சொந்தமான  வங்கிக் கணக்குகளை  முடக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளை அரசுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் ஒப்படைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி  உத்தரவிட்டிருந்தது.இதன்போது வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.எம் . ரத்நாயக்க கைப்பற்றப்பட்ட  20 மாடுகளையும் அரசுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் ஒப்படைக்காமல் கடத்தல்காரர்களிடமே மீண்டும் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி உத்தரவிட்டது.ஆனால் வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவை மீறி பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்ற தலைமறைவாக உள்ளார்.எனவே வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு சொந்தமான  வங்கிக் கணக்குகளை முடக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement