• Oct 04 2024

வங்கி வட்டி வீதங்கள் - வைப்பாளர்களுக்கான மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

Chithra / Feb 5th 2024, 8:16 am
image

Advertisement


வங்கி வைப்பாளர்களுக்கு நியாயமான வட்டியை வழங்கி, கடன் பெறுபவர்களுக்கு இலகுவான வட்டியையும் வழங்கி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் எமது நோக்கமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர்  நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரச நிதிக் கொள்கைகள் மற்றும் பிற கட்டமைப்புக் கொள்கைகளின் திசையை யாரேனும் மாற்ற முயற்சித்தால், அதனால் இடம்பெறப் போவது மீண்டும் பின்னோக்கித் திரும்புவது மாத்திரமேயாகும்.

தற்போது நிதிக் கொள்கையின் படி பணவீக்கத்திற்குப் பொருத்தமான வகையில் வட்டி விகிதம் கூடிக் குறைந்து செல்கின்றது. 

அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு, செலவுகளைக் கட்டுப்படுத்த, கடன் பெறுவதைக் குறைப்பதற்கான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் பாரியளவில் இழப்புக்களை அடைந்துள்ளன. இப்போது செலவு குறைந்த விலை நிலைப்படுத்தும் முறை நடைமுறைப்படுத்துகின்றது.

அரச நிறுவனங்கள் முறையாக நஷ்டத்தைச் சந்திக்காத திசையில் நகர்கின்றன. நாட்டின் வரி வருவாய் குறைந்ததாக யாராவது சொன்னால் மீண்டும் கடன் வாங்குவது அதிகரிக்கும். அதன்பின்னர் அதே பழைய தவறான முறையைப் பின்பற்றி நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும்.

யார் போனாலும் அடுத்த நான்கு வருடங்களுக்குள் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும், அடுத்த வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15% ஆக உயர்த்தப்பட வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

வங்கி வட்டி வீதங்கள் - வைப்பாளர்களுக்கான மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு வங்கி வைப்பாளர்களுக்கு நியாயமான வட்டியை வழங்கி, கடன் பெறுபவர்களுக்கு இலகுவான வட்டியையும் வழங்கி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் எமது நோக்கமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர்  நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரச நிதிக் கொள்கைகள் மற்றும் பிற கட்டமைப்புக் கொள்கைகளின் திசையை யாரேனும் மாற்ற முயற்சித்தால், அதனால் இடம்பெறப் போவது மீண்டும் பின்னோக்கித் திரும்புவது மாத்திரமேயாகும்.தற்போது நிதிக் கொள்கையின் படி பணவீக்கத்திற்குப் பொருத்தமான வகையில் வட்டி விகிதம் கூடிக் குறைந்து செல்கின்றது. அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு, செலவுகளைக் கட்டுப்படுத்த, கடன் பெறுவதைக் குறைப்பதற்கான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம்.அரசாங்கத்திற்குச் சொந்தமான மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் பாரியளவில் இழப்புக்களை அடைந்துள்ளன. இப்போது செலவு குறைந்த விலை நிலைப்படுத்தும் முறை நடைமுறைப்படுத்துகின்றது.அரச நிறுவனங்கள் முறையாக நஷ்டத்தைச் சந்திக்காத திசையில் நகர்கின்றன. நாட்டின் வரி வருவாய் குறைந்ததாக யாராவது சொன்னால் மீண்டும் கடன் வாங்குவது அதிகரிக்கும். அதன்பின்னர் அதே பழைய தவறான முறையைப் பின்பற்றி நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும்.யார் போனாலும் அடுத்த நான்கு வருடங்களுக்குள் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும், அடுத்த வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15% ஆக உயர்த்தப்பட வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement