• Jun 26 2024

உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்...!

Sharmi / Jun 17th 2024, 4:24 pm
image

Advertisement

கடலுக்கு மீன் பிடிக்க சென்று நடுக்கடலில் படகு மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் தமிழகத்தின் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ஆம் திகதி இரவு மண்டபம் சேதுநகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரசாந்த், ஹனிபா, கலீல் ரகுமான், பரகத்துல்லா, ஆரோக்கியம் ஆகிய  ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் மண்டபம் துறைமுகத்திலிருந்து சுமார் 8 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது படகின் அடிபகுதியில்  திடீரென உடைப்பு ஏற்பட்டதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

 இதில் பிரசாந்த் மற்றும் ஹனீப்பா ஆகிய இருவரும் உயிருடன் சக மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில் பரக்கத்துல்லா மற்றும் ஆரோக்கியம் இருவரும் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

 மேலும் கலீல் ரகுமான் என்ற மீனவர் காணாமல் போய் தற்போது வரை கிடைக்காததால் தொடர்ந்து மரைன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மீன்பிடி துறைமுக மீனவ சங்கம் சார்பில் நேற்று கோயில்வாடி கடற்கரையில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினர்.

 அக்கூட்டத்தில் இறந்த மூன்று மீனவர்களுக்கும் அனுதாபம் தெரிவிப்பதுடன், மூன்று மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை செய்ய முடிவு செய்தனர்.

 அதன் அடிப்படையில் இன்று மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு  நிறுத்தப்பட்டுள்ளது.

 இதனால் சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

 இதனிடையே தமிழக அரசால் வழங்கப்பட்ட இரண்டு லட்சத்திற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் இறந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி காசோலையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம். கடலுக்கு மீன் பிடிக்க சென்று நடுக்கடலில் படகு மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் தமிழகத்தின் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ஆம் திகதி இரவு மண்டபம் சேதுநகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரசாந்த், ஹனிபா, கலீல் ரகுமான், பரகத்துல்லா, ஆரோக்கியம் ஆகிய  ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.மீனவர்கள் மண்டபம் துறைமுகத்திலிருந்து சுமார் 8 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது படகின் அடிபகுதியில்  திடீரென உடைப்பு ஏற்பட்டதில் படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில் பிரசாந்த் மற்றும் ஹனீப்பா ஆகிய இருவரும் உயிருடன் சக மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில் பரக்கத்துல்லா மற்றும் ஆரோக்கியம் இருவரும் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் கலீல் ரகுமான் என்ற மீனவர் காணாமல் போய் தற்போது வரை கிடைக்காததால் தொடர்ந்து மரைன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்நிலையில் வடக்கு மீன்பிடி துறைமுக மீனவ சங்கம் சார்பில் நேற்று கோயில்வாடி கடற்கரையில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினர். அக்கூட்டத்தில் இறந்த மூன்று மீனவர்களுக்கும் அனுதாபம் தெரிவிப்பதுடன், மூன்று மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை செய்ய முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு  நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். இதனிடையே தமிழக அரசால் வழங்கப்பட்ட இரண்டு லட்சத்திற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் இறந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி காசோலையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement