• Nov 26 2024

கோட்டாவின் நூலால் கடும் அதிருப்தியில் பசில்..! வெளியான தகவல்

Chithra / Mar 13th 2024, 10:50 am
image

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நூல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக ராஜபக்சக்களின் உறவினரும் ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து தம்மை வெளியேற்றுவதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக கோட்டாபய ராபஜக்ச நூல் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்த நூலில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பசில் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக உதயங்க வீரதுங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்த நூலின் பிரதியொன்றை தாம் பசில் ராஜபக்சவிற்கு வழங்கும் நோக்கில் எடுத்துச் சென்றதாகவும், எனினும் அதற்கு முன்னரே நூலில் கூறப்பட்ட விடயங்களை பசில் அறிந்து கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நூலை வாசித்ததன் பின்னர் மகிந்த ராஜபக்சவும் ஆத்திரமடைவாரா என்பது தமக்கு தெரியவில்லை என உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார். 

கோட்டாவின் நூலால் கடும் அதிருப்தியில் பசில். வெளியான தகவல்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நூல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக ராஜபக்சக்களின் உறவினரும் ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி பதவியிலிருந்து தம்மை வெளியேற்றுவதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக கோட்டாபய ராபஜக்ச நூல் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.இந்த நூலில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பசில் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக உதயங்க வீரதுங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.இந்த நூலின் பிரதியொன்றை தாம் பசில் ராஜபக்சவிற்கு வழங்கும் நோக்கில் எடுத்துச் சென்றதாகவும், எனினும் அதற்கு முன்னரே நூலில் கூறப்பட்ட விடயங்களை பசில் அறிந்து கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த நூலை வாசித்ததன் பின்னர் மகிந்த ராஜபக்சவும் ஆத்திரமடைவாரா என்பது தமக்கு தெரியவில்லை என உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement