• Nov 25 2024

சர்வதேச சந்தையில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி சரிவு..!!

Tamil nila / Mar 1st 2024, 7:53 pm
image

சர்வதேச சந்தையில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு சரிவு ஏற்படுவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த ஆண்டில் இந்தியாவின் பாஸ்மதி அரிசிக்கான ஏற்றுமதி சாதனை அளவையும் தாண்டியது. ஆனால், இந்த ஆண்டு சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சர்வதேச சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசியின் பெரும் போட்டியாளரான பாகிஸ்தானின் எழுச்சி தற்போது ஆரம்பித்துள்ளது.

பாஸ்மதி அரிசியை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் போட்டி போட்டு ஈரான், ஈராக், ஏமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறது.

கடந்த ஆண்டில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 4.9 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. இதனால், உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக 5.4 பில்லியன் டொலர்களை குவிக்க முடிந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 21% அதிகமாகும்.

இந்த ஆண்டு இந்தியாவை விட பாகிஸ்தானின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் மொத்த அரிசி ஏற்றுமதி 3.7 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2023-24 -ம் நிதியாண்டில் 5 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டில், இந்திய பாஸ்மதி அரிசிக்கான கொள்முதலை 36 சதவீதமாக ஈரான் குறைத்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியது.

செங்கடல் வழி கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகளாலும், சரக்கு செலவுகள் காரணமாவும், பாஸ்மதி அரிசி ஏற்றுமதி குறையக்கூடும். 

இது இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.   

சர்வதேச சந்தையில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி சரிவு. சர்வதேச சந்தையில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு சரிவு ஏற்படுவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதாவது கடந்த ஆண்டில் இந்தியாவின் பாஸ்மதி அரிசிக்கான ஏற்றுமதி சாதனை அளவையும் தாண்டியது. ஆனால், இந்த ஆண்டு சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சர்வதேச சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசியின் பெரும் போட்டியாளரான பாகிஸ்தானின் எழுச்சி தற்போது ஆரம்பித்துள்ளது.பாஸ்மதி அரிசியை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் போட்டி போட்டு ஈரான், ஈராக், ஏமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறது.கடந்த ஆண்டில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 4.9 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. இதனால், உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக 5.4 பில்லியன் டொலர்களை குவிக்க முடிந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 21% அதிகமாகும்.இந்த ஆண்டு இந்தியாவை விட பாகிஸ்தானின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் மொத்த அரிசி ஏற்றுமதி 3.7 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2023-24 -ம் நிதியாண்டில் 5 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.கடந்தாண்டில், இந்திய பாஸ்மதி அரிசிக்கான கொள்முதலை 36 சதவீதமாக ஈரான் குறைத்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியது.செங்கடல் வழி கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகளாலும், சரக்கு செலவுகள் காரணமாவும், பாஸ்மதி அரிசி ஏற்றுமதி குறையக்கூடும். இது இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement