இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு,
மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (13) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
மட்டக்களப்பு, இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்று (13) காலை முதல் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகருமான ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் இந்த வாக்குப்பெட்டிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று (13) தேர்தல் கடமைகளுக்காக சுமார் 300 க்கும் அதிகமான வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இம்முறை தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் நிலையமாக இம்முறையும் இந்துக் கல்லூரியே அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு 46 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 09 நிலையங்களும் ஏனைய வாக்குகளை எண்ணுவதற்காக 37 நிலையங்களும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு : வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம் இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு, மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (13) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.மட்டக்களப்பு, இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்று (13) காலை முதல் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகருமான ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் இந்த வாக்குப்பெட்டிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இன்று (13) தேர்தல் கடமைகளுக்காக சுமார் 300 க்கும் அதிகமான வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.இம்முறை தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் நிலையமாக இம்முறையும் இந்துக் கல்லூரியே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 46 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 09 நிலையங்களும் ஏனைய வாக்குகளை எண்ணுவதற்காக 37 நிலையங்களும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.