• Mar 05 2026

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு நடைபவனி

Aathira / Feb 7th 2026, 11:08 am
image

மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு நடைபவனி இன்று (07) சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. 

பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில், பாடசாலையிலிருந்து வாகன பேரணியுடன் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், மாநகரசபையின் ஆணையாளரும் பழைய மாணவருமான என். தனஞ்செயன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

குறித்த நடைபவனியில் பாடசாலையின் ஸ்தாபகர் நல்லையா மாஸ்டர் உருவப்படத்தினை மாணவர்கள் தாங்கிச் சென்றார்.

மேலும் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பெருமளவு மக்கள் பேரணியில் கலந்துகொண்டனர். 

மூன்று இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கண்காட்சி பவனி மற்றும் பல்வேறு வகையான ஊர்திகள் இடம்பெற்றது. 

பேரணி, புகையிரத நிலைய வீதியூடாக அரசடி பல்கலைக்கழக சுற்றுவட்டம் மற்றும் திருமலை வழியாக தண்டவன்வெளி வரை சென்று மீண்டும் பாடசாலைக்கு வந்து நிறைவு பெற்றது.


மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு நடைபவனி மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு நடைபவனி இன்று (07) சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில், பாடசாலையிலிருந்து வாகன பேரணியுடன் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், மாநகரசபையின் ஆணையாளரும் பழைய மாணவருமான என். தனஞ்செயன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குறித்த நடைபவனியில் பாடசாலையின் ஸ்தாபகர் நல்லையா மாஸ்டர் உருவப்படத்தினை மாணவர்கள் தாங்கிச் சென்றார்.மேலும் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பெருமளவு மக்கள் பேரணியில் கலந்துகொண்டனர். மூன்று இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் கண்காட்சி பவனி மற்றும் பல்வேறு வகையான ஊர்திகள் இடம்பெற்றது. பேரணி, புகையிரத நிலைய வீதியூடாக அரசடி பல்கலைக்கழக சுற்றுவட்டம் மற்றும் திருமலை வழியாக தண்டவன்வெளி வரை சென்று மீண்டும் பாடசாலைக்கு வந்து நிறைவு பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement