• Mar 17 2026

சிறந்த வருடாந்த அறிக்கை, கணக்குகள் விருதுகள்; வெள்ளி பதக்கத்தை தனதாக்கி கொண்ட முல்லைத்தீவு மாவட்ட செயலகம்

Chithra / Feb 5th 2026, 9:12 pm
image


இலங்கை பொது நிதி கணக்காளர்கள் சங்கம் (Association of Public Finance Accountants of Sri Lanka - APFASL) மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பொது துறை பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025 வழங்கும் விழா, இன்றய தினம் 2026 பெப்ரவரி 5ஆம் திகதி BMICH – சிறிமாவோ பண்டாரநாயக்கா கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது.

பொதுத்துறை நிறுவனங்களில் நிதி வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சிறந்த கணக்கியல் நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வருட விழாவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக (வெள்ளி ) விருதை பெற்றுக்கொண்டது. 

இது மாவட்டச் செயலகத்தின் நிதி ஒழுங்கு, தரமான வருடாந்த அறிக்கை தயாரிப்பு மற்றும் நல்லாட்சி நடைமுறைகளுக்கான உறுதியை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகும்.

இந்த விருதை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் / மாவட்டச் செயலாளர்  A. உமாமகேஸ்வரன் மற்றும் பிரதம கணக்காளர்  ரஞ்சித் குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்று, மாவட்டச் செயலகத்தின் சார்பில் பெற்றுக்கொண்டனர்.

இவ்விழாவில் பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர் கௌரவ. நிஷாந்த ஜயவீர அவர்கள் பிரதம விருந்தினராகவும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் திரு. அலோக பண்டார அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். பொது துறையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


சிறந்த வருடாந்த அறிக்கை, கணக்குகள் விருதுகள்; வெள்ளி பதக்கத்தை தனதாக்கி கொண்ட முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இலங்கை பொது நிதி கணக்காளர்கள் சங்கம் (Association of Public Finance Accountants of Sri Lanka - APFASL) மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பொது துறை பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025 வழங்கும் விழா, இன்றய தினம் 2026 பெப்ரவரி 5ஆம் திகதி BMICH – சிறிமாவோ பண்டாரநாயக்கா கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது.பொதுத்துறை நிறுவனங்களில் நிதி வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சிறந்த கணக்கியல் நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இவ்வருட விழாவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக (வெள்ளி ) விருதை பெற்றுக்கொண்டது. இது மாவட்டச் செயலகத்தின் நிதி ஒழுங்கு, தரமான வருடாந்த அறிக்கை தயாரிப்பு மற்றும் நல்லாட்சி நடைமுறைகளுக்கான உறுதியை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகும்.இந்த விருதை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் / மாவட்டச் செயலாளர்  A. உமாமகேஸ்வரன் மற்றும் பிரதம கணக்காளர்  ரஞ்சித் குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்று, மாவட்டச் செயலகத்தின் சார்பில் பெற்றுக்கொண்டனர்.இவ்விழாவில் பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர் கௌரவ. நிஷாந்த ஜயவீர அவர்கள் பிரதம விருந்தினராகவும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் திரு. அலோக பண்டார அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். பொது துறையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement