• Jun 29 2026

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

Chithra / Jun 28th 2026, 3:33 pm
image


பொசன் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் 18,129 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தானசாலைகளை அமைக்கும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அமைப்பாளர்கள், அந்தந்தப் பகுதிக்குரிய பொது சுகாதார பரிசோதகரை சந்தித்து, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பொது சகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுடா தெரிவித்துள்ளார்.


தானசாலைகளில் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.


உணவு விநியோகத்தின் போது பொது சுகாதார நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியள்ளார்.


பொதுமக்கள் மற்றும் தானசாலை அமைப்பாளர்கள் அனைவரும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையச் செயற்படுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு பொசன் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் 18,129 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தானசாலைகளை அமைக்கும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அமைப்பாளர்கள், அந்தந்தப் பகுதிக்குரிய பொது சுகாதார பரிசோதகரை சந்தித்து, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பொது சகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுடா தெரிவித்துள்ளார்.தானசாலைகளில் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.உணவு விநியோகத்தின் போது பொது சுகாதார நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியள்ளார்.பொதுமக்கள் மற்றும் தானசாலை அமைப்பாளர்கள் அனைவரும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையச் செயற்படுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement