• Apr 30 2025

IPL தொடரில் சதமடித்த சிறுவன் - 10 இலட்சம் ரூபா பரிசளித்த பீகார் முதல்வர்

Thansita / Apr 29th 2025, 8:38 pm
image

IPL தொடரில் 14 வயதில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பீகார் முதல்வர் ரூ.10 இலட்சம்  பரிசளித்துள்ளார். 

IPL போட்டியின் 47ஆவது போட்டியலில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவா்களில்  209/4 ஓட்டங்கைளப் பெற்றுக்கொண்டது. 

அதன்பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவா்களில் 212/2  ஓட்டங்ளைப் பெற்று வெற்றியீட்டியது. 

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனைப் படைத்தாா். 

சதமடித்த இச் சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது

இந்நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து ரூ.10 இலட்சம் பரிசுத் தொகையையும் அளித்துள்ளார். 

இந்தப் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது: 

IPL வரலாற்றில் 14 வயதில் சதமடித்த பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துகள். கடின உழைப்புஇ திறமையினால் இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக மாறியுள்ளார். அனைவரும் இவரை நினைத்து பெருமைப்படுகிறார்கள். 

நான் இவரையும் இவரது தந்தையையும் 2024ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்போதே அவரது வருங்காலத்துக்கு வாழ்த்து கூறியிருந்தேன். ஐபிஎல் தொடரில் சதமடித்த பின்பு நானும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன். 

பீகார் அரசு சார்பில் இந்த இளம் பிகார் வீரருக்கு ரூ.10 இலட்சம் பரிசுத் தொகை அளிக்கிறேன். வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்கு புதிய சாதனைகளை நிகழ்த்தவும் இந்திய நாட்டிற்கு புகழைச் சேர்க்கவும் வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

IPL தொடரில் சதமடித்த சிறுவன் - 10 இலட்சம் ரூபா பரிசளித்த பீகார் முதல்வர் IPL தொடரில் 14 வயதில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பீகார் முதல்வர் ரூ.10 இலட்சம்  பரிசளித்துள்ளார். IPL போட்டியின் 47ஆவது போட்டியலில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவா்களில்  209/4 ஓட்டங்கைளப் பெற்றுக்கொண்டது. அதன்பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவா்களில் 212/2  ஓட்டங்ளைப் பெற்று வெற்றியீட்டியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனைப் படைத்தாா். சதமடித்த இச் சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றதுஇந்நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து ரூ.10 இலட்சம் பரிசுத் தொகையையும் அளித்துள்ளார். இந்தப் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது: IPL வரலாற்றில் 14 வயதில் சதமடித்த பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துகள். கடின உழைப்புஇ திறமையினால் இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக மாறியுள்ளார். அனைவரும் இவரை நினைத்து பெருமைப்படுகிறார்கள். நான் இவரையும் இவரது தந்தையையும் 2024ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்போதே அவரது வருங்காலத்துக்கு வாழ்த்து கூறியிருந்தேன். ஐபிஎல் தொடரில் சதமடித்த பின்பு நானும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன். பீகார் அரசு சார்பில் இந்த இளம் பிகார் வீரருக்கு ரூ.10 இலட்சம் பரிசுத் தொகை அளிக்கிறேன். வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்கு புதிய சாதனைகளை நிகழ்த்தவும் இந்திய நாட்டிற்கு புகழைச் சேர்க்கவும் வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement