• May 12 2024

ஜப்பானில் மீண்டும் வேகமாகப் பரவும் பறவைக் காய்ச்சல்!samugammedia

Sharmi / Mar 30th 2023, 10:23 am
image

Advertisement

ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. 


நாட்டில் உள்ள 47 மாகாணங்களில் 26 மாகாணங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் நேற்று முன்தினம் அதிகளவான கோழிகள் உயிரிழந்துள்ளன.


அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ,பண்ணையில் இருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க பண்ணையில் உள்ள 5 லட்சத்து 58 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் மீண்டும் வேகமாகப் பரவும் பறவைக் காய்ச்சல்samugammedia ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. நாட்டில் உள்ள 47 மாகாணங்களில் 26 மாகாணங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் நேற்று முன்தினம் அதிகளவான கோழிகள் உயிரிழந்துள்ளன.அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ,பண்ணையில் இருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க பண்ணையில் உள்ள 5 லட்சத்து 58 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement