• Nov 22 2024

தொலைபேசி ஊடாக தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையாகும் புதிய சட்டம்..!

Chithra / May 12th 2024, 7:34 am
image


தொலைபேசி ஊடாக பொய்யான தகவல்களைப் பகிர்ந்து பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக  இலங்கை தொலைத்தொடர்பு (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலமானது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளுதல், எந்தவொரு தொலைத்தொடர்பு அதிகாரி அல்லது எந்தவொரு நபருக்கும் எரிச்சல், சிரமம் மற்றும் தேவையில்லாத கவலை போன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதுபோன்ற குற்றங்களைச் செய்யும் நபரின் தொலைபேசி இணைப்புகளைத் துண்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் அல்லது பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் செய்திகளை அனுப்பும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு மில்லியன் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தொடர்ந்து குற்றம் நடந்தால், குற்றம் செய்தவருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன்  தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தவறான தகவல்களை அனுப்பும் தொலைத்தொடர்பு கருவிகள் மாஜிஸ்திரேட்டின்  உத்தரவு மூலம் அரசுக்கு பறிமுதல் செய்யப்படும்.

இலங்கையின் கடற்பரப்பிற்குள் அமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு சட்டமூலத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி ஊடாக தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையாகும் புதிய சட்டம். தொலைபேசி ஊடாக பொய்யான தகவல்களைப் பகிர்ந்து பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக  இலங்கை தொலைத்தொடர்பு (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த சட்டமூலமானது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளுதல், எந்தவொரு தொலைத்தொடர்பு அதிகாரி அல்லது எந்தவொரு நபருக்கும் எரிச்சல், சிரமம் மற்றும் தேவையில்லாத கவலை போன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதுபோன்ற குற்றங்களைச் செய்யும் நபரின் தொலைபேசி இணைப்புகளைத் துண்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வேண்டுமென்றே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் அல்லது பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் செய்திகளை அனுப்பும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு மில்லியன் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.தொடர்ந்து குற்றம் நடந்தால், குற்றம் செய்தவருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன்  தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.தவறான தகவல்களை அனுப்பும் தொலைத்தொடர்பு கருவிகள் மாஜிஸ்திரேட்டின்  உத்தரவு மூலம் அரசுக்கு பறிமுதல் செய்யப்படும்.இலங்கையின் கடற்பரப்பிற்குள் அமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு சட்டமூலத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement