• Nov 25 2024

இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும்..! மக்களுக்க அவசர அறிவுறுத்தல்

Chithra / Jun 25th 2024, 4:02 pm
image


இந்தியாவில் சமிபகாலமாக பரவி வரும் பரவைக்காய்ச்சலை (H9) கருத்திற் கொண்டு இலங்கையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் கீழ் விசேட நோய் தடுப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டினுள் பரவைக்காய்ச்சல் தொற்றாளர்கள் பதிவாகும் பட்சத்தில் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது அவசியம் எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக நோய் குறித்து பொதுமக்கள் தெளிவுபெற வேண்டும். 

நாட்டில் பரவைக்காய்ச்சல் தொற்றாளர்கள் எவரேனும் அடையாளம் காணப்படும் பட்சத்தில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். 

பறவைக்காய்ச்சல் பொதுவாக பறவைகளிடையே பரவக்கூடியது. எனினும் அரிதான வகையில் மனிதர்களிடையே பரவுகிறது.

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற பறவைகளின் எச்சங்களை தொடுவதை தவிர்ப்பதோடு கோழி இறைச்சி அல்லது முட்டை ஆகியவற்றை தொட்டதன் பின்னர் கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவது அவசியம். 

அதற்கு பதிலாக கை கழுவும் திரவியங்களை பயன்படுத்துவதும் பாதுகாப்பானது. நன்றாக சமைத்த கோழி இறைச்சி, முட்டைகளை உணவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் தொடர்பில் உடனடியாக அருகில் உள்ள சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்கவும். 

தன்னிச்சையாக அவற்றை கையாளாதீர்கள். அவற்றால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின்  (MRI) வைரஸ் விஞ்ஞான திணைக்களம் H5 மற்றும் H7 வைரஸ் வகைகளைக் கண்டறியும் திறனுக்கு பதிலாக H9 இன்புளூவன்சா (Influenza) வகையை அடையாளம் காண அவசியமான PCR பரிசோதனைக்கான வசதிகளை நிறுவப்பட்டுள்ளன.

பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுப்பதற்காக சுகாதார அமைச்சின் கீழ் மிக உயர்ந்த தரத்தில் நோயை கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.


இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும். மக்களுக்க அவசர அறிவுறுத்தல் இந்தியாவில் சமிபகாலமாக பரவி வரும் பரவைக்காய்ச்சலை (H9) கருத்திற் கொண்டு இலங்கையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் கீழ் விசேட நோய் தடுப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு நாட்டினுள் பரவைக்காய்ச்சல் தொற்றாளர்கள் பதிவாகும் பட்சத்தில் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது அவசியம் எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வலியுறுத்தியுள்ளது.பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக நோய் குறித்து பொதுமக்கள் தெளிவுபெற வேண்டும். நாட்டில் பரவைக்காய்ச்சல் தொற்றாளர்கள் எவரேனும் அடையாளம் காணப்படும் பட்சத்தில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். பறவைக்காய்ச்சல் பொதுவாக பறவைகளிடையே பரவக்கூடியது. எனினும் அரிதான வகையில் மனிதர்களிடையே பரவுகிறது.நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற பறவைகளின் எச்சங்களை தொடுவதை தவிர்ப்பதோடு கோழி இறைச்சி அல்லது முட்டை ஆகியவற்றை தொட்டதன் பின்னர் கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவது அவசியம். அதற்கு பதிலாக கை கழுவும் திரவியங்களை பயன்படுத்துவதும் பாதுகாப்பானது. நன்றாக சமைத்த கோழி இறைச்சி, முட்டைகளை உணவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் தொடர்பில் உடனடியாக அருகில் உள்ள சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்கவும். தன்னிச்சையாக அவற்றை கையாளாதீர்கள். அவற்றால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின்  (MRI) வைரஸ் விஞ்ஞான திணைக்களம் H5 மற்றும் H7 வைரஸ் வகைகளைக் கண்டறியும் திறனுக்கு பதிலாக H9 இன்புளூவன்சா (Influenza) வகையை அடையாளம் காண அவசியமான PCR பரிசோதனைக்கான வசதிகளை நிறுவப்பட்டுள்ளன.பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுப்பதற்காக சுகாதார அமைச்சின் கீழ் மிக உயர்ந்த தரத்தில் நோயை கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement