தென்கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வந்தது. இதனால் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே குறைந்தது.
எனவே அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அறிவுறுத்தியது.
ஆனால் அதிகரிக்கும் கல்விச்செலவு, கலாசார மாற்றத்தால் இளைஞர்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 ஆயிரத்து 300 அதிகம் ஆகும். இதன்மூலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக தென்கொரிய புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு தென்கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வந்தது. இதனால் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே குறைந்தது.எனவே அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அறிவுறுத்தியது. ஆனால் அதிகரிக்கும் கல்விச்செலவு, கலாசார மாற்றத்தால் இளைஞர்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.இதனையடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 ஆயிரத்து 300 அதிகம் ஆகும். இதன்மூலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக தென்கொரிய புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.