தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility Study) இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, UN-Habitat Climate Resilient Project அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் மற்றும் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் (Consultants) ஆகியோர் இணைந்து கள ஆய்வில் பங்கேற்றனர்.
இதன்போது தண்ணிமுறிப்பு குளத்தின் தற்போதைய நிலைமைகள், அணைக்கட்டின் பலப்படுத்தல் பணிகள், பழுதடைந்த கதவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் குளத்திற்கு நீர் வரத்து ஏற்படுத்தும் ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் நேரடியாக பார்வையிடப்பட்டன. மேலும், குளத்தின் நீர்வரத்து மற்றும் நீர்மட்டத்தை அளவிடுவதற்கான கண்காணிப்பு உபகரணங்களை நிறுவுவதற்கான பொருத்தமான இடங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
அதேபோன்று, குளத்தைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள நீர்மட்டத்தை கண்காணிக்கும் அளவீட்டு கருவிகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுவதற்கான சாத்தியமான இடங்களும் பரிசீலிக்கப்பட்டன.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் சுற்றுப்புற மழைப்பதிவு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு காலத்திற்கேற்ற வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க முடியும்.
இதன் மூலம் தண்ணிமுறிப்புக் குளத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும், வெள்ள அபாயம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே வழங்கி உயிர் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதற்கு உதவியாக அமையும்.
தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility Study) இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, UN-Habitat Climate Resilient Project அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் மற்றும் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் (Consultants) ஆகியோர் இணைந்து கள ஆய்வில் பங்கேற்றனர்.இதன்போது தண்ணிமுறிப்பு குளத்தின் தற்போதைய நிலைமைகள், அணைக்கட்டின் பலப்படுத்தல் பணிகள், பழுதடைந்த கதவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் குளத்திற்கு நீர் வரத்து ஏற்படுத்தும் ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் நேரடியாக பார்வையிடப்பட்டன. மேலும், குளத்தின் நீர்வரத்து மற்றும் நீர்மட்டத்தை அளவிடுவதற்கான கண்காணிப்பு உபகரணங்களை நிறுவுவதற்கான பொருத்தமான இடங்களும் ஆய்வு செய்யப்பட்டன.அதேபோன்று, குளத்தைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள நீர்மட்டத்தை கண்காணிக்கும் அளவீட்டு கருவிகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுவதற்கான சாத்தியமான இடங்களும் பரிசீலிக்கப்பட்டன.இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் சுற்றுப்புற மழைப்பதிவு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு காலத்திற்கேற்ற வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க முடியும்.இதன் மூலம் தண்ணிமுறிப்புக் குளத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும், வெள்ள அபாயம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே வழங்கி உயிர் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதற்கு உதவியாக அமையும்.