• Sep 21 2024

ஈழத்தை ஆக்கிரமிக்கும் பாஜக - சிக்கிவிட்டார்களா ஈழத்தமிழர்கள்..! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 12:36 pm
image

Advertisement

பிரகாரன் உயிருடன் இருந்தால் அது உண்மையாகும் வரை காத்திருக்கலாம் எனவும் ஒருவேளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நாடுகளின் அனுமதியோடு தான் அவர்கள் வெளிவருவார்கள் எனவும் அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரன் அவர்கள் வெளிவருவதற்கான களம் இலங்கையிலும் உலக நாடுகளிலும் ஏற்படுத்தப்பட்டதாக பழ.நெடுமாறன் தெரிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஈழத்தமிழர்களின் தொப்பிள் கொடி இந்தியா மட்டும் இல்லை என்றும் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற பலர் தற்போது ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளமையால் அந்த நாடுகளும் எமது தொப்பிள் கொடி உறவுகள் தான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், பாஜக எமது நலன் சார்ந்து குரல் கொடுத்தால் நல்லது என்றும் ஆனால் அவர்களின் கட்சி சார்ந்த செயற்பாடுகளை நுழைப்பது நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.


பாஜகவின் செயற்பாடுகள் ஈழத்தில் அதிகரித்துள்ளமையால் பாஜகவின் பிடியில் சிக்கிவிட்டார்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஈழத்தை ஆக்கிரமிக்கும் பாஜக - சிக்கிவிட்டார்களா ஈழத்தமிழர்கள். SamugamMedia பிரகாரன் உயிருடன் இருந்தால் அது உண்மையாகும் வரை காத்திருக்கலாம் எனவும் ஒருவேளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நாடுகளின் அனுமதியோடு தான் அவர்கள் வெளிவருவார்கள் எனவும் அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரன் அவர்கள் வெளிவருவதற்கான களம் இலங்கையிலும் உலக நாடுகளிலும் ஏற்படுத்தப்பட்டதாக பழ.நெடுமாறன் தெரிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஈழத்தமிழர்களின் தொப்பிள் கொடி இந்தியா மட்டும் இல்லை என்றும் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற பலர் தற்போது ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளமையால் அந்த நாடுகளும் எமது தொப்பிள் கொடி உறவுகள் தான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், பாஜக எமது நலன் சார்ந்து குரல் கொடுத்தால் நல்லது என்றும் ஆனால் அவர்களின் கட்சி சார்ந்த செயற்பாடுகளை நுழைப்பது நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.பாஜகவின் செயற்பாடுகள் ஈழத்தில் அதிகரித்துள்ளமையால் பாஜகவின் பிடியில் சிக்கிவிட்டார்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement