• Nov 23 2024

இந்திய இழுவை படகுகளின் அக்கிரமங்களுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்...! கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு...!

Sharmi / Feb 24th 2024, 1:56 pm
image

இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய - இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின்  சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இன்றையதினம் யாழில் (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன்  இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்த வேளை, எமது கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில் பயணித்த மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போது இந்திய அரசாங்கம், அந்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு எமது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

எங்களுடைய வளங்களை அழித்தவர்களை எப்படி விடுதலை செய்ய முடியும்? அவர்களுக்குரிய தக்க தண்டனை கொடுத்த பின்னரே அவர்களை விடுதலை செய்யலாம். ஏனென்றால் எங்களது வளங்கள் எத்தனையோ காலமாக அழிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய வளங்களை சூறையாடி தங்களது பிழைப்புகளை நடத்தியவர்கள், தங்களது மீனவர்களை எமது அரசாங்கம் பிடித்து வைத்துள்ளபோது அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

அடுத்த வாரத்தில் எமது கடல் தொழிலாளர்கள் இணைந்து கறுத்தக்கொடி போராட்டம் ஒன்றினை இலங்கை - இந்திய கடல் எல்லையில் நடாத்த உள்ளோம். 

எங்களது அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய கூடாது.   கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு தக்க தண்டனையை கொடுக்க வேண்டும்ஹ எக்காரணம் கொண்டும் அவர்களிடம் மண்டியிடக் கூடாது என்பதை நாங்கள் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.


இந்திய இழுவை படகுகளின் அக்கிரமங்களுக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம். கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு. இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய - இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின்  சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.இன்றையதினம் யாழில் (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைப்பின் பிரதிநிதி பாக்கியநாதன் றேகன்  இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்த வேளை, எமது கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில் பயணித்த மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இப்போது இந்திய அரசாங்கம், அந்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு எமது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.எங்களுடைய வளங்களை அழித்தவர்களை எப்படி விடுதலை செய்ய முடியும் அவர்களுக்குரிய தக்க தண்டனை கொடுத்த பின்னரே அவர்களை விடுதலை செய்யலாம். ஏனென்றால் எங்களது வளங்கள் எத்தனையோ காலமாக அழிக்கப்பட்டுள்ளது.எங்களுடைய வளங்களை சூறையாடி தங்களது பிழைப்புகளை நடத்தியவர்கள், தங்களது மீனவர்களை எமது அரசாங்கம் பிடித்து வைத்துள்ளபோது அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.அடுத்த வாரத்தில் எமது கடல் தொழிலாளர்கள் இணைந்து கறுத்தக்கொடி போராட்டம் ஒன்றினை இலங்கை - இந்திய கடல் எல்லையில் நடாத்த உள்ளோம். எங்களது அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய கூடாது.   கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு தக்க தண்டனையை கொடுக்க வேண்டும்ஹ எக்காரணம் கொண்டும் அவர்களிடம் மண்டியிடக் கூடாது என்பதை நாங்கள் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement