• Apr 13 2025

மன்னாரில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

Chithra / Apr 10th 2025, 2:45 pm
image


மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தர  பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 'குருதி கொடுத்து உயிரை காப்போம்' எனும் தொனிப் பொருளில் குருதிக் கொடை முகாம் இன்று வியாழக்கிழமை(10) காலை 10 மணி முதல் -மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர். சந்தியோகு தலைமையில் குறித்த குருதிக் கொடை முகாம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் வைத்தியசாலை வைத்தியர்கள், பணியாளர்கள் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த குருதிக் கொடை முகாம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் இடம்பெற்ற இரத்ததான முகாம் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தர  பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 'குருதி கொடுத்து உயிரை காப்போம்' எனும் தொனிப் பொருளில் குருதிக் கொடை முகாம் இன்று வியாழக்கிழமை(10) காலை 10 மணி முதல் -மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர். சந்தியோகு தலைமையில் குறித்த குருதிக் கொடை முகாம் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் வைத்தியசாலை வைத்தியர்கள், பணியாளர்கள் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த குருதிக் கொடை முகாம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement