உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப் பொருளில், கந்தளாய் அல் தாரிக் தேசிய பாடசாலையில் நேற்று (5) இரத்ததான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கந்தளாய் மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் நிலவும், இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இதனை, கந்தளாய் அல்-புர்னி விளையாட்டுக் கழகம் மற்றும் புதிய மத்ரஸா நகர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
திருகோணமலை போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் உதவியோடு, கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஊழியர்கள் இரத்ததான நிகழ்வை மேற்கொண்டுயிருந்தனர்.
இந்த நிகழ்வில் இளைஞர்கள், யுவதிகள், அரச ஊழியர்கள் மற்றும் முப்படையினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு, இரத்ததானம் செய்தனர்.
கந்தளாயில் இரத்ததான நிகழ்வு உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப் பொருளில், கந்தளாய் அல் தாரிக் தேசிய பாடசாலையில் நேற்று (5) இரத்ததான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கந்தளாய் மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் நிலவும், இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.இதனை, கந்தளாய் அல்-புர்னி விளையாட்டுக் கழகம் மற்றும் புதிய மத்ரஸா நகர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.திருகோணமலை போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் உதவியோடு, கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஊழியர்கள் இரத்ததான நிகழ்வை மேற்கொண்டுயிருந்தனர்.இந்த நிகழ்வில் இளைஞர்கள், யுவதிகள், அரச ஊழியர்கள் மற்றும் முப்படையினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு, இரத்ததானம் செய்தனர்.