• Nov 19 2024

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; மாயமான மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு!

Chithra / Aug 29th 2024, 8:45 am
image


 கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இரு இந்திய  மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கட்டுள்ளார்.

காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் நேற்று  யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை   தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு மீனவர்களை மீட்டுள்ளதோடு, அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரும் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் நேற்றையதினம்  குமுதினி படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில்  மாயமான மீனவர்கள்  இருவரை ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு  சக மீனவர்கள்  இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில், 

நேற்று மாலை  நடுக்கடலில்  மாயமான மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உடல் கூறு பரிசோதணைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து  மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்  கடலில் மாயமான வெள்ளைச்சாமி என்ற மீனவரை அரசு தேடித்தரும்படி கோரிக்கை விடுத்துள்ள உறவினர்கள், இறந்த மீனவர் எமரிட் குடும்பத்தித்கு அரச நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; மாயமான மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு  கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இரு இந்திய  மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கட்டுள்ளார்.காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் நேற்று  யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை   தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு மீனவர்களை மீட்டுள்ளதோடு, அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.அந்த வகையில் மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரும் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் நேற்றையதினம்  குமுதினி படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.இந்நிலையில்  மாயமான மீனவர்கள்  இருவரை ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு  சக மீனவர்கள்  இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில், நேற்று மாலை  நடுக்கடலில்  மாயமான மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.சடலம் உடல் கூறு பரிசோதணைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து  மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்  கடலில் மாயமான வெள்ளைச்சாமி என்ற மீனவரை அரசு தேடித்தரும்படி கோரிக்கை விடுத்துள்ள உறவினர்கள், இறந்த மீனவர் எமரிட் குடும்பத்தித்கு அரச நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement