• Sep 25 2026

மன்னாரில் இருந்து ராமர் பால மணல் திட்டுகளை பார்வையிட படகு சேவை - வெள்ளோட்டம் ஆரம்பம்

Chithra / Sep 25th 2026, 3:07 pm
image


உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கான வெள்ளோட்ட நடவடிக்கை இன்று (25) வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.


வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் கலந்து கொண்டார்.


மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் நகர பிரதேச செயலாளர் காந்தீபன் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.


மன்னாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தலைமன்னார் கடற்கரையிலிருந்து மூன்றாவது மணல் திட்டை நோக்கி விசேட படகுகள் மூலம் பயணம் மேற்கொள்ளப்பட்டு வெள்ளோட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.


காலை சுமார் 9 மணியளவில் தலைமன்னார் கடற்கரையிலிருந்து புறப்பட்ட விசேட படகுகள் மூன்றாவது மணல் திட்டை சென்றடைந்தன.


இரண்டாவது மணல் திட்டில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும், தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மூன்றாவது மணல் திட்டை சுற்றுலாத்தளமாக மேம்படுத்தி, அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை விசேட படகுகள் மூலம் அழைத்துச் சென்று, அப்பகுதியை பார்வையிடச் செய்து மீண்டும் அழைத்து வரும் நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.


இதன் மூலம் வடமாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மன்னார் மாவட்டத்திற்கும் வருகை தந்து, தலைமன்னாரிலிருந்து கட்டணம் செலுத்தி விசேட படகுகள் மூலம் மூன்றாவது மணல் திட்டை சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.


மேலும், இந்த நடவடிக்கையின் ஊடாக தலைமன்னார் பகுதியில் சுயதொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளையும், வருமானத்தை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களையும் உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மணல் திட்டை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் தினம் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவினரால் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து ராமர் பால மணல் திட்டுகளை பார்வையிட படகு சேவை - வெள்ளோட்டம் ஆரம்பம் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கான வெள்ளோட்ட நடவடிக்கை இன்று (25) வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் கலந்து கொண்டார்.மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் நகர பிரதேச செயலாளர் காந்தீபன் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.மன்னாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தலைமன்னார் கடற்கரையிலிருந்து மூன்றாவது மணல் திட்டை நோக்கி விசேட படகுகள் மூலம் பயணம் மேற்கொள்ளப்பட்டு வெள்ளோட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.காலை சுமார் 9 மணியளவில் தலைமன்னார் கடற்கரையிலிருந்து புறப்பட்ட விசேட படகுகள் மூன்றாவது மணல் திட்டை சென்றடைந்தன.இரண்டாவது மணல் திட்டில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும், தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மூன்றாவது மணல் திட்டை சுற்றுலாத்தளமாக மேம்படுத்தி, அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை விசேட படகுகள் மூலம் அழைத்துச் சென்று, அப்பகுதியை பார்வையிடச் செய்து மீண்டும் அழைத்து வரும் நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.இதன் மூலம் வடமாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மன்னார் மாவட்டத்திற்கும் வருகை தந்து, தலைமன்னாரிலிருந்து கட்டணம் செலுத்தி விசேட படகுகள் மூலம் மூன்றாவது மணல் திட்டை சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.மேலும், இந்த நடவடிக்கையின் ஊடாக தலைமன்னார் பகுதியில் சுயதொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளையும், வருமானத்தை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களையும் உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.மணல் திட்டை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் தினம் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவினரால் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement