• Oct 05 2024

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..!!

Tamil nila / Jan 29th 2024, 6:54 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்றைய தினம் (29.01.2024) சாலை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.


முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த குடும்பஸ்தர் அலையால் இழுத்து செல்லப்பட்டு நீரில் மாயமாகியிருந்தார்.

இந்த சம்பத்தினை தொடர்ந்து தேடுதல் நடாத்தியும் சடலம் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் இன்றையதினம் மாலை குறித்த குடும்பஸ்தரின் சடலம்  சாலை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.


குறித்த சம்பவத்தில் 33 அகவையுடைய 10 ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மேலும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் பிரேத பரிசோதனையினை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.



குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


முல்லைத்தீவு மாத்தளன் கடலில் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மீட்பு. முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்றைய தினம் (29.01.2024) சாலை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த குடும்பஸ்தர் அலையால் இழுத்து செல்லப்பட்டு நீரில் மாயமாகியிருந்தார்.இந்த சம்பத்தினை தொடர்ந்து தேடுதல் நடாத்தியும் சடலம் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் இன்றையதினம் மாலை குறித்த குடும்பஸ்தரின் சடலம்  சாலை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.குறித்த சம்பவத்தில் 33 அகவையுடைய 10 ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் பிரேத பரிசோதனையினை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement