• Mar 06 2025

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Thansita / Mar 5th 2025, 10:08 pm
image

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக

அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டனர்

அப்பகுதியில் ஒரு கிழமைக்கு முன்னர் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக சந்தேகத்துடன் அப்பகுதிக்கு சென்ற சிலர் குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டனர்அப்பகுதியில் ஒரு கிழமைக்கு முன்னர் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக சந்தேகத்துடன் அப்பகுதிக்கு சென்ற சிலர் குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.மேலும் இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement