தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளியின் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவப் பள்ளிகள் என்பது இராணுவ ஊழியர்களின் குழந்தைகளுக்கான பாகிஸ்தான் முழுவதும் உள்ள பள்ளிகளின் வலையமைப்பாகும்.
பாகிஸ்தான் இராணுவத்தின் அறிக்கையின்படி, குறைந்தது மூன்று மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பபடுகிறது.
அதேவேளை, காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் பலூச் பிரிவினைவாதிகள் மீது சந்தேகம் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, குழந்தைகளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
பள்ளிப் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்-பாகிஸ்தானில் பயங்கரம். தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளியின் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இராணுவப் பள்ளிகள் என்பது இராணுவ ஊழியர்களின் குழந்தைகளுக்கான பாகிஸ்தான் முழுவதும் உள்ள பள்ளிகளின் வலையமைப்பாகும்.பாகிஸ்தான் இராணுவத்தின் அறிக்கையின்படி, குறைந்தது மூன்று மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பபடுகிறது.அதேவேளை, காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் பலூச் பிரிவினைவாதிகள் மீது சந்தேகம் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, குழந்தைகளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.