• Nov 26 2025

நுகேகொடைக் கூட்டம் வெற்றி; அச்சுறுத்தி எம்மை அடக்க முடியாது..! மொட்டுக் கட்சி ஆவேசம்

Chithra / Nov 26th 2025, 11:19 am
image

அச்சுறுத்தல்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது என முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது.

அந்தவகையில் எமது நுகேகொடைக் கூட்டம் வெற்றியளித்தது. மக்களுக்காக எமது அரசியல் நடவடிக்கை தொடரும். அச்சுறுத்தல் மூலம் எவரும் எமது பயணத்தைத் தடுக்க முடியாது.

மக்களின் குறை கேட்கும் தலைவராக நாமல் ராஜபக்சவே தற்போது விளங்குகின்றார். 

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசிடம் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொடைக் கூட்டம் வெற்றி; அச்சுறுத்தி எம்மை அடக்க முடியாது. மொட்டுக் கட்சி ஆவேசம் அச்சுறுத்தல்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது என முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது.அந்தவகையில் எமது நுகேகொடைக் கூட்டம் வெற்றியளித்தது. மக்களுக்காக எமது அரசியல் நடவடிக்கை தொடரும். அச்சுறுத்தல் மூலம் எவரும் எமது பயணத்தைத் தடுக்க முடியாது.மக்களின் குறை கேட்கும் தலைவராக நாமல் ராஜபக்சவே தற்போது விளங்குகின்றார். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசிடம் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement