• Jun 21 2024

ரஷ்ய அதிகாரியின் காரில் வெடிகுண்டு பொருத்திய மர்ம நபர்கள்!

Tamil nila / Jun 15th 2024, 7:42 pm
image

Advertisement

ரோஸ்டோவ் பிராந்தியத்தில் ரஷ்ய இராணுவ அதிகாரியின் வாகனத்தின் அடியில் வைக்கப்பட்ட கார் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

மில்லெரோவோ நகரில் நேற்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

“இராணுவப் பிரிவின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் வாடிம் எஸ். தனது வால்வோவை ஓட்டிச் சென்றபோது திடீரென கார் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

நிலைமையை சுதாகரித்துக்கொண்ட குறித்த அதிகாரி காரில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.

முதலில் எரிவாயு பாகங்கள் செயலிழப்பால் வெடிவிபத்து நிகழந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காரைச் சுற்றி 4 மிமீ விட்டம் கொண்ட உலோக பந்துகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எதிரிகள் இதனை திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



ரஷ்ய அதிகாரியின் காரில் வெடிகுண்டு பொருத்திய மர்ம நபர்கள் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் ரஷ்ய இராணுவ அதிகாரியின் வாகனத்தின் அடியில் வைக்கப்பட்ட கார் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.மில்லெரோவோ நகரில் நேற்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.“இராணுவப் பிரிவின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் வாடிம் எஸ். தனது வால்வோவை ஓட்டிச் சென்றபோது திடீரென கார் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.நிலைமையை சுதாகரித்துக்கொண்ட குறித்த அதிகாரி காரில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.முதலில் எரிவாயு பாகங்கள் செயலிழப்பால் வெடிவிபத்து நிகழந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காரைச் சுற்றி 4 மிமீ விட்டம் கொண்ட உலோக பந்துகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே எதிரிகள் இதனை திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement