• Jun 21 2024

ஆனையிறவு உப்பளம் அமைந்துள்ள பகுதியில் வெடிக்காத நிலையில் RPG குண்டுகள்!

Tamil nila / Jun 15th 2024, 7:49 pm
image

Advertisement

கிளிநொச்சி - ஆனையிறவு உப்பளம் அமைந்துள்ள பகுதியில் வெடிக்காத நிலையில் RPG குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இவ்வாறு 4 குண்டுகள் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். நாளை நீதிமன்றின் அனுமதியுடன் பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆனையிறவு பகுதியில் பல வருடங்களுக்கு மேலாக யுத்தம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. இதன்போது எறியப்பட்ட ஏறிகணைகள் வெடிக்காத நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




ஆனையிறவு உப்பளம் அமைந்துள்ள பகுதியில் வெடிக்காத நிலையில் RPG குண்டுகள் கிளிநொச்சி - ஆனையிறவு உப்பளம் அமைந்துள்ள பகுதியில் வெடிக்காத நிலையில் RPG குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் இவ்வாறு 4 குண்டுகள் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். நாளை நீதிமன்றின் அனுமதியுடன் பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.ஆனையிறவு பகுதியில் பல வருடங்களுக்கு மேலாக யுத்தம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. இதன்போது எறியப்பட்ட ஏறிகணைகள் வெடிக்காத நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement