• Feb 05 2025

மின்னஞ்சல்கள் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்; மூடப்பட்டது 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள்!

Chithra / Dec 9th 2024, 12:57 pm
image


வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நேற்று இரவும் இன்று  காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கே வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பிரகாரம் இந்திய பொலிஸார் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,

இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்களை உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த அக்டோபரில், இந்தியாவில் உள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, பின்னர் அவை தவறான எச்சரிக்கைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.


மின்னஞ்சல்கள் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்; மூடப்பட்டது 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.நேற்று இரவும் இன்று  காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கே வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.அதன்பிரகாரம் இந்திய பொலிஸார் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்களை உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த அக்டோபரில், இந்தியாவில் உள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, பின்னர் அவை தவறான எச்சரிக்கைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement