• Sep 20 2024

புத்தகப் பைகள் சோதனை; போதைப்பொருள் ஆர்வம் மாணவரிடையே தூண்டப்படலாம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Chithra / Dec 21st 2022, 3:38 pm
image

Advertisement

மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுத்துவதனால், போதைப்பொருள் தொடர்பான ஆர்வம் அவர்கள் மத்தியில் தூண்டக்கூடும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் சிறார்களின் மனநிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளைத் தடுப்பதற்காக, மாணவர்களின் பைகளை சோதனையிடும்போது, போதைப்பொருள் குறித்து அறிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டும் போக்கு ஏற்படும்.

எனவே, காவல்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி, மாணவர்களின் பைகளை பரிசோதிப்பதற்கு, தமது சங்கம் எதிர்ப்பு வெளியிடுவதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள 200 பாடசாலைகளில், 200 ஆசிரியர்களுக்கு, போதைப்பொருள் தடுப்புக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக, அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 3 நாட்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்தச் சபையின் தலைவர் சாக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புத்தகப் பைகள் சோதனை; போதைப்பொருள் ஆர்வம் மாணவரிடையே தூண்டப்படலாம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுத்துவதனால், போதைப்பொருள் தொடர்பான ஆர்வம் அவர்கள் மத்தியில் தூண்டக்கூடும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த விடயத்தில் சிறார்களின் மனநிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.போதைப்பொருளைத் தடுப்பதற்காக, மாணவர்களின் பைகளை சோதனையிடும்போது, போதைப்பொருள் குறித்து அறிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டும் போக்கு ஏற்படும்.எனவே, காவல்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி, மாணவர்களின் பைகளை பரிசோதிப்பதற்கு, தமது சங்கம் எதிர்ப்பு வெளியிடுவதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, கொழும்பிலுள்ள 200 பாடசாலைகளில், 200 ஆசிரியர்களுக்கு, போதைப்பொருள் தடுப்புக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக, அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது.எதிர்வரும் 3 நாட்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்தச் சபையின் தலைவர் சாக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement