• Jun 16 2024

யாழில் 'நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி' நூல் வெளியீட்டு விழா

Sharmi / May 23rd 2024, 6:14 pm
image

Advertisement

'நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி' எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்றையதினம்(23) சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ் சித்த மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மருத்துவரும் நூலாசிரியருமான தியாகராஜா சுதர்மனின் 'நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி' என்ற நூல்,  நிகழ்வின் பிரதம விருந்தினராக மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் மருத்துவர் திருமதி கனகேஸ்வரி ஜெபநாமகணேசனால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து சித்தமருத்துவ கைதடி போதனா வைத்தியசாலையினால் வாழ்த்து மடலும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் சியாமலா துரைரட்ணம் ,சித்த மருத்துவர்கள், தெல்லிப்பழை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பரா நந்தகுமார், நூலாசிரியகள், நலன் விரும்பிகள், சித்த மருத்துவ மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


 

யாழில் 'நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி' நூல் வெளியீட்டு விழா 'நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி' எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்றையதினம்(23) சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ் சித்த மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.மருத்துவரும் நூலாசிரியருமான தியாகராஜா சுதர்மனின் 'நீரிழிவு முகாமையில் உணவு உள்ளம் உடற்பயிற்சி' என்ற நூல்,  நிகழ்வின் பிரதம விருந்தினராக மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் மருத்துவர் திருமதி கனகேஸ்வரி ஜெபநாமகணேசனால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.தொடர்ந்து சித்தமருத்துவ கைதடி போதனா வைத்தியசாலையினால் வாழ்த்து மடலும் வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் சியாமலா துரைரட்ணம் ,சித்த மருத்துவர்கள், தெல்லிப்பழை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பரா நந்தகுமார், நூலாசிரியகள், நலன் விரும்பிகள், சித்த மருத்துவ மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement