• Jun 16 2024

கல்முனை நகர் பிரதேசத்தில் இரு வழிப் பாதை திறந்துவைப்பு...!

Sharmi / May 23rd 2024, 6:00 pm
image

Advertisement

கல்முனை நகர் இளம் வர்த்தகர்கள் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ்  இடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கல்முனை  நகர் பிரதேசத்தில் உள்ள ஒரு வழிப் பாதை இரு வழிப் பாதையாக இன்று(23) உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

இவ் உத்தியோகபூர்வ நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் தலைமையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி.எம். எல். புத்திக நெறிப்படுத்தலில் ஆரம்பமானதுடன் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்து கொண்டு இரு வழிப்பாதையை திறந்து வைத்தார்.

இன்று முதல் குறித்த ஒரு வழிப் பாதை ( டமாஸ் ஜூவலரி சந்தியில் இருந்து கொமர்சியல் வங்கி வரையான ஒரு வழிப்பாதை) இரு வழியாக மாற்றப்பட்டு பொதுப் போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது.

 கல்முனையின் இளம் பிரபல வர்த்தகர் எஸ்.எம். றிப்னாஸ் தலைமையிலான வர்த்தர்களான எஸ்.எம்.எம். அப்சார், எம்.எச்.எம். முபாரிக், வை.வி. சியாம், எஸ்.எம். ஜின்னா, எம்.வை.எம். பஸ்மீர், ஏ.எம்.அஸ்ஜா, எம்.எச்.எம். தஸ்லிம், ஏ.எம்.சஜாத்,ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களிடம் விடுத்த  வேண்டுகோளுகிணங்க குறித்த ஒரு வழிப் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எச்.அசீம், கல்முனை மாநகர பொறியியலாளர் ஜெளஸி அப்துல் ஜப்பார்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை மாநகரில் நீண்டகால பிரச்சினையாக இருந்த ஒரு வழிப்பாதையை இரு வழிப்பாதையாக மாற்ற   நடவடிக்கை எடுத்த பொலிஸ்  உயர் அதிகாரிகளுக்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நன்றி  தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


கல்முனை நகர் பிரதேசத்தில் இரு வழிப் பாதை திறந்துவைப்பு. கல்முனை நகர் இளம் வர்த்தகர்கள் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ்  இடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கல்முனை  நகர் பிரதேசத்தில் உள்ள ஒரு வழிப் பாதை இரு வழிப் பாதையாக இன்று(23) உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.இவ் உத்தியோகபூர்வ நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் தலைமையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி.எம். எல். புத்திக நெறிப்படுத்தலில் ஆரம்பமானதுடன் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்து கொண்டு இரு வழிப்பாதையை திறந்து வைத்தார்.இன்று முதல் குறித்த ஒரு வழிப் பாதை ( டமாஸ் ஜூவலரி சந்தியில் இருந்து கொமர்சியல் வங்கி வரையான ஒரு வழிப்பாதை) இரு வழியாக மாற்றப்பட்டு பொதுப் போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. கல்முனையின் இளம் பிரபல வர்த்தகர் எஸ்.எம். றிப்னாஸ் தலைமையிலான வர்த்தர்களான எஸ்.எம்.எம். அப்சார், எம்.எச்.எம். முபாரிக், வை.வி. சியாம், எஸ்.எம். ஜின்னா, எம்.வை.எம். பஸ்மீர், ஏ.எம்.அஸ்ஜா, எம்.எச்.எம். தஸ்லிம், ஏ.எம்.சஜாத்,ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களிடம் விடுத்த  வேண்டுகோளுகிணங்க குறித்த ஒரு வழிப் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எச்.அசீம், கல்முனை மாநகர பொறியியலாளர் ஜெளஸி அப்துல் ஜப்பார்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் கல்முனை மாநகரில் நீண்டகால பிரச்சினையாக இருந்த ஒரு வழிப்பாதையை இரு வழிப்பாதையாக மாற்ற   நடவடிக்கை எடுத்த பொலிஸ்  உயர் அதிகாரிகளுக்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நன்றி  தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement